சிலிண்டர் விலை ஏற்றம்
புத்தாண்டு தொடங்கியுள்ள முதல் நாளே இந்த மாதத்திற்கான சிலிண்டர் விலை உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் மாதம்தோறும் கேஸ் சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் இந்த விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்படுகிறது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதமும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1917 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஆண்டு முதல் நாளே கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.