நடிகை சங்கவி எப்படி இருக்கிறார்?
நடிகை சங்கவி கோலிவுட்டில் நுழைந்த புதிதில், விஜயுடன் காதல் வயப்பட்டு இருந்தார். அதன் பிறகு அந்த காதல் ஏனோ தோல்வி அடைந்தது. 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.
நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து நிறைய விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக பத்திரிக்கைகள் தெரிவித்தன. பத்திரிக்கை செய்திகளில் இவர்களை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை.
திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் பெங்களூரில் கணவர் மற்றும் இவரது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதில் நெகிழும் விஷயம் என்ன என்றால் தனது 42 வது வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றுள்ளார்.
குழந்தையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார்.