சிக்ஸ் பேக் உடலை காட்டிய தமன்னா
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
அதனால் இவரின் ரசிகர்கள் கூட்டம் திடீரென அதிகரித்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, இந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.
வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.
தற்போது ஜிம்முக்கு சென்று குண்டான உடம்பை கும்மென்று குறைத்து மேலாடையை தூக்கி சிக்ஸ்பேக் உடலை காட்டி, புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.