Ads
ஜனாதிபதி ஆசனத்தில் இருந்து இலட்சினை நீக்கம்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உள்ள ஜனாதிபதியின் இலச்சினை இம்முறை நீக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அந்த இருக்கையில் அரச இலட்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் "அதிமேதகு" என்ற பட்டம், ஜனாதிபதியின் கொடி மற்றும் ஜனாதிபதி இலச்சினையை பயன்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்தார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவையில் உரையாற்ற உள்ளார்.
Info
Ads
Latest News
Ads