சினிமா செய்திகள்
கருடன் திரைப்படத்தின் 50-வது நாள் - நடிகர் சூரி ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் க
டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா. கடந்த ஆண
அமரன் திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பெற்ற நிறுவனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரு
தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருக
கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி,
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி
உலாஜ் படத்தில் மும்முரமாக இருந்த நடிகை ஜான்வி கபூர் கடுமையான உணவு விஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அவரது தந்தையும்
மறக்க முடியாத நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்
32000 ரூபாய் செலவில் ஒரு திரைப்படம். கதாநாயகனுக்கு சம்பளம் 140 ரூபாய்.1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்ட
பாடகி ஜானகியின் சாதனைகள்...
60 - வருடங்கள்17 - மொழிகள்48000 - பாடல்கள்4 - தேசிய விருதுகள்32 - மாநில விருதுகள்7 - தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது10 - ஆந்திர மாநில அரசின்
எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்ன
நாகேஷ் என்னும் அற்புத நகைச்சுவை நடிகர்
🌹இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு, ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்
 மிக எளிமையானவர் நடிகர் நாகேஷ்
திரு.நாகேஷ் அவர்கள்.மைலாப்பூர் கபாலி கோவில் தெப்பக்குளத்தின் படிகட்டுகளில் உட்கார்ந்துகொண்டு வற்றிப் போன தெப்பக் குளத்தைப் பார்த்து “அந்தப் பழைய நாள்க
இந்தியன் 2' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் மற்றும் இந்த படத்திற்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு
Ads
 ·   ·  8 news
  •  ·  6 friends
  • R

    8 followers

வியாபாரத்துக்கான முதலீடாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மாற்றப்பட்டமையே தீர்வுகளை எட்டமுடியாதிருக்க காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு.

காணாமல் ஆக்கப்பட்டோர் வியடம் தற்போது ஒரு சிலரது சுயநலத்துக்காக சர்வதேசத்தை நோக்கிய வியாபாரமாக ஆக்கப்பட்டமையே உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் உறவுகள் அவலங்களுடனும் ஏக்கத்துடன் இன்றும் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (26) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிறீரங்கேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்ததுடன் அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

எமது நாட்டைப் பொறுத்தளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமென்பது பெரும் பேசு பொருளான ஒரு விடயமாக உள்ளது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகள் அதை நோக்கி சரியாக தமது கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் ஒரு சில சுயநல அரசியல் வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளதன் வெளிப்பாடே இதுவரை எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாதிருக்கின்றது.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான காலப்பகுதிககுள் காணாமல் அக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உண்மையாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எத்தகைய ஆதரவு அல்லது ஒத்துழைப்புகள் கிடைத்திருக்கின்றது என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய விடயமாக உள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினாகிய நாம் 1995 களில் அதாவது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில், பல்வேறு அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவற்றை உடைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பாதுகாவலர் சங்கத்தை அமைத்து உறவுகளை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர்கள் இன்றும் தமது பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அது அவர்களது உணர்வுடன் கூடிய விடயம்.

ஆனால் அதை கொச்சைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டுக் குழு அல்லது சங்கம் என்று கூறி அவர்களது கட்டமைப்புக்குள் உள்நுழைந்த சுயநல அரசியல் குழுவினர் அவர்களது வலிகளையும் வேதனைகளையும் தமக்கான அரசியல் வியாபாரத்தின் முதலீடாக்கி வருமானம் ஈட்டும் ஒரு மையப்பொருளாக அந்த போராட்டத்தை திசைவழிமாறச் செய்துவிட்டனர்.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து  சுயநலன்களையும் அரசியல் இலாபங்களையும் குறித்த தரப்பினர் கைவிட்டு தீர்வுகளையும் பரிகாரத்தையும் தேடிகொள்ளும் வகையில் அந்த உறவுகளுக்கு ஒத்துழைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 499
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads