பிரித்தானிய பிரதமரின் நாடு கடத்தும் திட்டத்தால், அதிர்ச்சியடைந்துள்ள புலம்பெயர்ந்தோர்
மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும் கூட புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவதில் உறுதியாக இருக்கிறார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனேக்.
இந்நிலையில், வடக்கு பிரான்சிலுள்ள Dunkirk நகரில் முகாமிட்டுள்ள, புலம்பெயர்வோர், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள், தாம் பிரித்தானியாவில் கால்வைத்ததும், பிரித்தானிய அதிகாரிகள் தங்களைப் பிடித்து ருவாண்டாவுக்கு நாடு கடத்திவிடக்கூடும் என்பது தங்களுக்குத் தெரியும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதி என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் கிடையாது.
பிரித்தானியாவுக்கு புலம்பெயரவேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அங்கு சென்றால், தங்களைப் பிடித்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தை உருவாக்கவே, பிரித்தானிய பிரதமர் ரிஷியும், அவரது உள்துறைச் செய்லரான ஜேம்ஸ் கிளெவர்லியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.