அதிபர், ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்; சஜித் பிரேமதாஸ
அதிபர், ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் -அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதிபர்,ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையினை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த நாட்டில் 2 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 16 ஆயிரம் அதிபர்கள் உள்ளனர்.
ஆசிரியர் சேவை மற்றும் அதிபர் சேவையில் சம்பள பிரச்சியை காணப்படுகின்றது. அதிபர் – ஆசிரியர்களிள் சம்பள கோரிக்கை தொடர்பாக பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஏப்ரல் 18 ஆம் திகதி கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் செயலாளரின் கையொப்பத்துடன் கடிதமொன்று வெளியிடப்பட்டது.
அதிபர், ஆசிரியர் சேவையில் சம்பளபிரச்சினை இல்லை என்றே அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பாரிய பிரச்சினையாகும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.