மலையகப் புகையிரதப் பாதையில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகள்
மலையகப் புகையிரதப் பாதையில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான செயற்பாடுகளால் ஆபத்தில் சிக்கக்கூடும் என புகையிரதப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான பகுதியில் சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி செல்ஃபி எடுப்பதற்காகவும், சில வெளிநாட்டவர்கள் புகையிரத மிதி பலகைகளில் தொங்கி முத்தமிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள், கடந்த 21ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள் எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த வெளிநாட்டு பெண்களும் விபத்தினால் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உல்நாட்டு புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.