குற்றச்சம்பவங்களின் குறைவிற்கு யுக்தியவே காரணம்
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் குற்றங்கள் மற்றும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 10 ஆம் திகதி 2024 முதல் 17 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் பதிவாகிய குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இது தெரியவந்துள்ளது.அதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் விடுமுறை காலத்தின் 08 நாட்களில்,
கொலை சம்பவங்கள் 26ல் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.
காயங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் 507 வழக்குகளில் இருந்து 389 வழக்குகளாக குறைந்துள்ளன.
தாக்குதல் வழக்குகள் 4,431 வழக்குகளில் இருந்து 4,018 வழக்குகளாக குறைந்துள்ளன.
சர்ச்சைகள்/மோதல் சம்பவங்கள் 4,425ல் இருந்து 3,936 சம்பவங்களாக குறைந்துள்ளன.
சொத்து/பணம் திருட்டு வழக்குகள் 339ல் இருந்து 244 ஆக குறைந்துள்ளது.
வீடுகளை உடைக்கும் சம்பவங்கள் 195ல் இருந்து 150 ஆக குறைந்துள்ளது
நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 29ல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது.
தீக்குளிப்புபதிவுகள் 48ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் 9ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு காலத்தில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையே இதற்குக் காரணம் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும், நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்ற வகையில் குற்றத் தடுப்புத் திட்டங்களைத் தயாரித்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்