Category:
Created:
Updated:
மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இராணுவ வாகனமொன்றும் லொறியும் மோதிய விபத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்ததுடன் 9 சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் மாங்குளம், வசந்தநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் பலியாகியுள்ளார். மேலும் 9 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
ஏ.09 வீதியின் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுருகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு திரும்ப முற்பட்ட கப்ரக வாகனமும் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.