Category:
Created:
Updated:
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்களன்று (22) பாகிஸ்தானை சென்றடைந்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாகவும், அவரை வீட்டு வசதி அமைச்சர் மியான் ரியாஸ் ஹுசைன் பிர்சாடா மற்றும் ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முடாசிர் திப்பு ஆகியோர் வரவேற்றதாக வெளியுறவு அலுவலகம் (FO) தெரிவித்துள்ளது.
"ஈரான் ஜனாதிபதியுடன் அவரது துணைவியார் மற்றும் வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு உள்ளது" என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது.