Ads
யாழ்ப்பாணத்தில் இதுவரை 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 6ஆயிரத்து 15பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணபதிப்பிள்ளை மகேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads