Ads
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த 320 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 80,670 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் சுயேட்சைக் குழுக்கள் வாயிலாகவும், அரசியல் கட்சிகள் மூலமாகவும் அதற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ள நிலையில், வேட்பாளர்களின் கட்டுப் பணமும் மீளக் கையளிக்கப்படவுள்ளது
000
Info
Ads
Latest News
Ads