பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றின் மத்தியில் சீனா செல்லும் ஜனாதிபதி அனுர – ஒப்பங்தங்களுடன் வைரசும் இலங்கை வருமா என்று மக்கள் அச்சம்
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.
சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றின் மத்தியில் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வது பலத்த எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் சீனாவில் பரவும் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி.) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் கடந்த 2022 சீனாவில் உருவான கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 2 மில்லியனுகும் அதிகமான மக்கள் பலியாகினர் என கூறப்படுகின்றது. அதேபோன்று பல மில்லியன் மக்கள் அந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் இருந்தனர்.
இதனால் சீனாவில் புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதேநேரம் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.
அத்தோடு இந்த விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.
இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது முக்கிய 7 ஒப்பங்தங்கள் கைசாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றின் மத்தியிலும் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதானது இலங்கைக்கு குறித்த வைரசை கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் ஏற்படும் எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
00