ஆசி ஆணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் திருத்தம்
ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளை அதிகரித்து, வரவிருக்கும் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையில் திருத்தம் செய்யுமாறு கிரிக்கெட் அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் (SLC) கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த அவுஸ்திரேலியா மேலதிக போட்டியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து ஏற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டால், இந்த சுற்றுப்பயணத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் 02 ஒருநாள் போட்டிகளில் விளையாடும்.
முந்தைய அட்டவணையின்படி, ஹம்பாந்தோட்டையில் ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டது.
எவ்வாறெனினும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டால், இரண்டு ஒருநாள் போட்டிகளும் கொழும்பில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.
இந்த விடயம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத போதிலும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் இரண்டு நாட்களில் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் கோரப்பட்டாலும், டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லாமல் இருக்கும்.
000