Category:
Created:
Updated:
யாழில் காய்ச்சாத காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது 2 ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு கடந்த 26 ஆம் திகதி காலை காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
000