Category:
Created:
Updated:
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகின்றன.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 648,490 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நேற்று ஆரம்பமான நிலையில், அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றும் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், வாக்களிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
000