சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

தமிழர்களிடம் போராட்டச் சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது – புஸ்பராணியின் அனுதாபச் செய்தியில் தவராசா தெரிவிப்பு

ஈழம் தமிழர்களிடம் போராட்டம் என்ற சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது என மறைந்த புஸ்பராணி அவர்களுக்கான  அனுதாபச் செய்தியில் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

பிரான்சில் அமரத்துவமடைந்த அன்னாருக்கு தனது அனுதாபத்’தை வெளியிட்டுள்ள அவர் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் கூறுகையில் –

ஈழத் தமிழர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய சிந்தனை பொறியை தோற்றுவித்தவர்களுள் ஒருவர் இன்று சிந்தனையை நிறுத்தி இருக்கின்றார்.

யாழ்ப்பாணம் தமிழாராட்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனம் புஸ்பராணியின் மனதினுள் குமுறிக்கொண்டிருந்த இன உணர்வுக்கும் தமிழ் பற்றிற்கும் எண்ணெய் ஊற்றியது எனலாம்.

யாழ். கோட்டையின் ராணி மாளிகையில் அன்று செயற்பட்ட வதை முகாமில் நாம் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது சுவரின் மறுபுறத்தில் அடைக்கப்பட்டிருந்த புஸ்பராணி பொலிஸாரின் அட்டூழியம் தாங்காமல் எழுப்பிய ஓலக் குரல் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகள் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருந்தாலும் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருந்தார் என்பதை புஸ்பராணியின் அகாலம் நூல் எமக்கு வெளிப்படுத்திநிற்கிறது.

இறுதிவரை வாசிப்பு எழுத்து என்று வாழ்ந்தவர் தனது போராட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் தனது நூலில் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைத்து சென்றிருக்கின்றார்.

அந்தவகையில் ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் தனியிடம் ஒதுக்கப்பட வேண்டிய புஸ்பராணி இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றார். அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் குறிப்பாக அவரின் போராட்ட வாழ்விற்கு துணைநின்ற அவரின் சகோதரிகள் உட்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த வலிகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 736
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads