சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண் – கை முறிந்த நிலையில் யாழ் போதனாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வட்டுக்கோட்டை இந்து மாணவன்

தரம் 7 இல் கல்விபயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.04.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –

சிவரூபன் லோஷனன் என்ற 11 வயதுடைய மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையின் அருகாமையில் குறித்த சிறுவன் சென்ற நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் தன்னை மோதியதில் தான் துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் வழு்ந்ததாக சிறுவன் தெரிவித்தார்.

அத்துடன் விபத்தில் சிக்குண்டு காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தன்னை பெருட்படுத்தாது அந்தப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வீழ்ந்துகிடந்த தன்னை தனது பாடசாலையின் முன்பாக வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிரேஸ்ர மாணவர்கள் ஓடிவந்து தூக்கி தனது நிலையை அவதானித்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன், தனக்கு பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து தனது பெற்றோருக்கு தகவல் வழங்கியதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் குறித்த விபத்தில் மாணவனின் கை முறிந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் பொலிசார் வீதிக் கடமையில் வழமையாக இருந்துவரும் நிலையில் சில நாள்களாக அந்த செயற்பாடுகள் இல்லாதுள்ளமையை அவதானிக்க முடிவதாக மாணவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பித்தக்கது.

000

  • 671
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads