
இந்தியா - பாகிஸ்தான் அரசாங்கங்கள் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் - ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நிலைமையை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டதை மீண்டும் நினைவூட்டியது.
இந்நிலையில் நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தாம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாகத் தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
000