
ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (28) இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.
யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும், ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் ஆகியோரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்பட்டது.
மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பக 41 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கும் நிலையில் இன்றுவரை அவர்களுக்கான நீதி எந்தவொரு அரசுகளாலும் வழங்கப்படாதிருக்கின்ற நிலையில் நீதியை வழங்குமாறு இந்த நினைவு நாளில் வலுயுறுத்தப்பட்டது.
இதன்போது ஊடகவியாளர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய நினைவேந்தல் போது பொலிஸார் மற்றும் புலனாய்ப்பிரிவினரின் கடும் அச்சுறுத்தல் காணப்பட்டமை குறிப்பிடதக்கது
000