
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது அம்மா நடிகையாக மாறியிருப்பவர்.
தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் ரோகிணி நடித்துள்ளார். அதோடு, பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் ரகுவரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரை பிரிந்து வாழ்ந்தார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் நடிப்பில் வெளியான விட்னஸ் திரைப்படம் திரைப்பட விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பட்டது.
நடிகை ரோகிணி நடிப்பது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கும், பல திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், கதாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் பல முகங்களை கொண்டவர். ஆனால், பலருக்கும் தெரியாத முகம் ஒன்று அவருக்கு இருக்கிறது. இவர் ஒரு பாடலாசிரியரும் கூட.
கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்குள் நானே’ என்கிற பாடலை எழுதியவர் இவர்தான். அதேபோல், விஜய் நடித்த வில்லு படத்தில் ‘ஜல்சா’ பாடலை எழுதியதும் ரோகிணிதான். அதேபோல், மாயா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முன் தினம் பார்த்தேனே’ மற்றும் மாலைப்பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர் தான்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva