Category:
Created:
Updated:
அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டார்.
ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து அஞ்சல் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும், சாதகமான எந்த தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
000