சினிமா செய்திகள்
குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்
4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ்.
பிரகாஷ்ராஜ் செய்த உதவி
"இந்த தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒ
கண்ணதாசன் பற்றி இளையராஜா கருத்து
சிச்சுவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சிச்சுவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெ
எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள்
பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில த
இசை விமர்சகர் சுப்புடு
தற்போது வரும் பாடல்கள் ரொம்ப தரம் குறைந்து மிக மிக மோசமான காலகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன 1960 இல் வந்த பாடல்கள், எண்பதுகளில் வந்த பாடல்கள், 9
சாதித்துக் காட்டினார் விசு
சம்சாரம் அது மின்சாரம்`அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!'- தோல்வி படத்தை ரீமேக் செய்து சாதித்தார் விசுமனிதர்கள் அருகருகே வசித்தாலும், மனதளவில் தொலைவில் வ
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நட
எம்.கே.தியாகராஜ பாகவதர்
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். விழிப்புணர்வோடு இருங்கள்.இந்த எச்சரிக்கையை தன் வாழ்வில் அனுபவபூர்வமாக, அணுஅணுவாக அனுபவித்த
எஸ்பிபி பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் பிரபு
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபு.'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில்
பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு - தமன்னாவின் அறிக்கை
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இத
பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் டீசர் 2 இதோ .....
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ
Ads
 ·   ·  2675 news
  •  ·  1 friends
  • 2 followers

தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் - வலியுறுத்தும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் விக்ரர்

ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிபது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CMEV) பணிப்பாளர் விக்ரர், தமக்கான அந்த அதியுயர் சக்தியை மக்கள் சரியாக பயன்படுத்தி வெற்றி கொள்வது மிக அரிதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் செலவீனங்களை முன்னிறுத்திய தேர்தல் பிரசாரங்கள் அதன் மதிப்பீடு செய்யப்பட செலவீனங்கள் தொடர்பில் கண்காணிப்பு தொடர்பிலான மாவட்ட மட்ட தேர்தலுடன் தொடர்புடையவர்களுடனான கலந்துரையடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அரியாலை சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சசீபன், யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் சார் பிரதிநிதிகள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்

இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் - தேர்தலின் முக்கிய பங்குதாரரான வாக்காளர்களுக்கும், தேர்தல் திணைக்களம், பொலிசார், கண்காணிப்பு அதிகாரிகள், இடையான தகவல் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் பலவகையான தாக்கங்களை செலுத்திவருகின்றன. இதை ஒரு முறையான பொறிமுறைக்குள் கொண்டுவருவது அவசியமாகும்.

மற்றும் தேர்தல்கால வன்முறைகளை இனங்காண்டு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கல். அவற்றை கட்டுப்படுத்தல்,  தேர்தல் செலவீனங்களை கையாளுதல் உள்ளிட்ட விடயங்களும் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது.

இதேநேரம் வரவுள்ள தேர்தல்களினல் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும் என்பது ஒரு பொதுக்கருத்தாக இருக்கின்றது. இந்த தாக்கம் தனி நபரையோ கட்சிகளையோ பாதிப்பதாக அமையுமானால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைக்கு எவ்வாறு செல்வது என்பதும் பலருக்கு கடினமானதொன்றாகவே இருக்கின்றது. அதனடிப்படையில் இதற்கான விழிப்புணர்வு மிக அவசியமாகும். அதையே இந்த கலந்துரையாடல் உறுதி செய்யுமென நினைக்கின்றேன்.

சட்டதிலுள்ள சிறு இடைவெளிளை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்புவோர்  தப்பித்துக்கொள்ளும் நிலை இருப்பதனால் அத்தகைய தவறான செய்திகளை பரப்புபவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாரும் துறைசார் வல்லுநர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

இதேநேரம் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையமானது கடந்த 28 வருடங்களாக இலங்கையில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துவருகின்றது.

எமக்கு நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் சமனானதே. தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவதை உறுதி செய்வதை வலியுறுத்தவே நாம் எமது கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதுமட்டுமல்லாது தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் வகிபாகம் அதிகரிப்பதை உறுதிசெய்யவும் அதற்கான விளிப்புணர்வுகளை ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடையும் வகையில் முன்னெடுத்தும் வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

 

  • 537
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads