பிரகாஷ்ராஜ் செய்த உதவி

"இந்த தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.

அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவிக்கு, பல்கலைக்கழக மேற்படிப்புக்காக கல்வி உதவி தேவைப்பட்டது.

தற்செயலாக இதை பார்த்தார் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன்.

பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த தகவலை சொன்னார்.

அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். "நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?"

"உண்மைதான் சார். நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி, அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்."

பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார்.

கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.

அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க..

இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்

மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.

அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார். இது 2020 இல் நடந்தது.

இப்போது அந்தப் பெண் - பெயர் ஸ்ரீ சாந்தனா -

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.

இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.

மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்த மாணவி பற்றிய தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜ்க்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:

"இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன். அவ்வளவுதான்."

பிரகாஷ்ராஜ் - க்கும் நன்றி. நவீனுக்கும் நன்றி.

சரியான நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு கல்விக்கான நிதியை கிடைக்கச் செய்த இந்தப் பிரபஞ்சத்திற்கும் நன்றி.

  • 426
  • More
சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு