
சாதித்துக் காட்டினார் விசு
சம்சாரம் அது மின்சாரம்
`அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!'- தோல்வி படத்தை ரீமேக் செய்து சாதித்தார் விசு
மனிதர்கள் அருகருகே வசித்தாலும், மனதளவில் தொலைவில் வாழ்கிறார்கள். சமகாலத் திரைப்படங்கள் இந்தப் பிரச்சினையை உரையாட வேண்டியது அவசியம்
1986 ஆம் ஆண்டு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பதம் பார்த்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் கண்ணம்மா என்ற மனோரமா ........
வீட்டின் வேலைக்காரியாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினாலும் ஒரு விசுவாசமான பணியாளரின் குணாதிசயத்தை அற்புதமாகச் சித்திரித்துக் காட்டினார் மனோரமா. கிஷ்முவுடன் இவர் மோதி நடிக்கும் ‘கம்முன்னு கெட’ வசனக்காட்சி மிகவும் ‘ஹிட்’ ஆனது. இதைப் போலவே, குழந்தையை விசுவின் காலடியில் போட்டு அவரின் மனதை மாற்றும் காட்சியிலும் மனோரமாவின் நடிப்பு அருமை.
விதிவிலக்காக, இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன. சங்கர் – கணேஷ் கூட்டணி அருமையான பாடல்களை உருவாக்கியிருந்தார்கள். கூடுதல் சிறப்பம்சமாக, வைரமுத்துவின் வரிகள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன. ‘தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டா தாலி மிஞ்சுமா’ என்பது போன்ற வரிகள் பெற்றோர்களின் தியாகத்தைச் சிறப்பாக உணர்த்தின.
இந்த திரைப்படத்திற்காக ஒரு
வீட்டையேக் கட்டி கொடுத்தாராம்
ஏவிஎம் சரவணன். இப்போது அது சென்டிமென்ட் வீடாகி விட்டதாம். இந்த வீட்டில் சூட்டிங் எடுப்பது ரஜினிக்கு பிடித்தமான விஷயமாம்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதிற்கான ‘தங்கத் தாமரை’ விருதைப் பெற்றது. ஒரு தமிழ்த் திரைப்படம், இந்தப் பிரிவில் தங்கத் தாமரை விருது வாங்குவது இதுவே முதன்முறை. அந்தப் பெருமையை ‘சம்சாரம் அது மின்சாரம்’ பெற்றது.
கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்புக்குச் சில பலவீனங்கள் இருக்கும். அதே சமயத்தில் நிறைய பலங்களும் உண்டு. அப்படியொரு அற்புதமான விஷயத்தை நாம் இன்றைக்குப் பெரிதும் தவற விட்டிருக்கிறோம். இளைய தலைமுறையினர் இன்றைக்குப் பார்த்தாலும் மிகுந்த சுவாரஸ்யமான அனுபவத்தையும் பாடத்தையும் தரக்கூடிய திரைப்படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva