
இசை விமர்சகர் சுப்புடு
தற்போது வரும் பாடல்கள் ரொம்ப தரம் குறைந்து மிக மிக மோசமான காலகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன 1960 இல் வந்த பாடல்கள், எண்பதுகளில் வந்த பாடல்கள், 90களில் வந்த பாடல்கள்,ஏன் 2000களில் கூட பாடல்கள் ஓரளவு நன்றாக வந்தது.
சமீப காலங்களாக அவ்வளவு விசேஷமாக பாடல்கள் எதுவும் வருவதில்லை. கத்துவது கூப்பாடு போடுவது, கூச்சல் இடுவது இப்படித்தான் பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த காலத்தில் இருந்து கடந்த 2007 வரை ஒரு பெரிய இசை விமர்சகர் இருந்தார் அவர் பெயர் சுப்புடு. இசை விமர்சகர் என எல்லா பத்திரிகைகளிலும் இவரது பேட்டி வரும். தவறான பாடல்கள் அனைத்தையும் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுவிடுவார் சுப்புடு. உதாரணமாக ரகுமானின் பல அதிரடி பாடல்களை அந்த காலகட்டத்தில் இவர் பயங்கரமாக விமர்சனம் செய்திருந்தார். குமுதம்,ஆனந்த விகடன் பத்திரிகைகளுக்கு சுப்புடுவின் பேட்டியை எடுத்து போடுவது தான் வசதியாக இருக்கும் அந்த காலகட்டத்தில். ஏனென்றால் தரம் இல்லாத பாடல்களை போட்டு பிளந்து எடுக்க இவர் தயங்க மாட்டார். இவரின் இசை விமர்சனமும் பரபரப்பாக இருக்கும்.
இளையராஜாவின் பாடல்களை அதிகம் இவர் குறை சொல்லியது இல்லை அதிகம் பாராட்டத்தான் செய்வார். அதிலும் சில குறைகள் இருந்தால் அதிகபட்சம் சொல்வார் ஆனால் அதிகபட்சம் இளையராஜாவின் பாடல்களை இவர் பாராட்டி தான் பழக்கம். இளையராஜா 1993ல் லண்டனில் சிம்பொனி இசையமைத்து வந்த போது இவர்தான் முதல் நபராக சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்லியவர். கடந்த 2007இல் சுப்புடு மறைந்தார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva