
தொழிற் சந்தையை தொழில் தேடுவோர் தமக்கானதாக்கி வெற்றிகொள்ள வேண்டும் - யாழ் மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன் வலியுறுத்து
யாழ் மவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தெழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகமும் மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து முன்னெடுத்த தொழிற் சந்தை நிகழ்வு இன்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில் -
தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை ஒன்றிணைத்து இளைஞர் யுவதிகளின் தொழிற் தேடுதலுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் களமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இதை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேநேரம் குடா நாட்டிலுள்ள 40 இற்கும் அதிகமான தொழில் வழங்கும் நிறுவனங்களின் பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த தொழிற்சந்தை நிகழ்வில் 500 இற்கும் அதிகமான உடனடி வேலைவாய்ப்புகளை வழங்க குறித்த நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.