
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் எவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து அதிருப்தி
கடந்த 20 நாட்கள் நடைபெற்ற 15 போட்டிகளைக் கொண்ட சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் டுபாயில் இடம்பெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் இந்தியா 12 வருடங்களுக்குப் பின்னர் வெற்றி கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இருப்பினும் போட்டியை நடத்திய பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் எவரும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி தொடரை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்த போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை, குறிப்பாகச் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி நிறைவு விழாவிற்காக டுபாய் செல்லவில்லை.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காகப் பாகிஸ்தானுக்கான பிரதிநிதியாக அனுப்பப்பட்ட நபர், பணியாளர் என்ற காரணத்தால், சட்டதிட்டங்களுக்கு அமைய மேடைக்குச் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இந்த அசாதாரண நடத்தை காரணமாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
00