
குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்
4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். அவரே தான் இயக்கிய ஒரு படத்தின் ஒரு காட்சிக்கு, வசனம் வராமல், 4 நாட்கள் திணறிக்கொண்டிருந்தபோது அவருக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வசனம் சொல்லி கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாக்யராஜ். அந்த படத்தில் ஒரு மருத்துவர் கேரக்டரிலும் நடித்திருப்பார். அதன்பிறகு, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட சில படங்களில் பாரதிராஜாவுடன் பணியாற்றிய பாக்யராஜ், தனது குருநாதர் இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்த பாக்யராஜ், சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்றுபோச்சு, பொய்சாட்சி, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய பாக்யராஜ், நாயகனாகவும் வெற்றி பெற்றார்.
அந்த வகையில், கடந்த 1985-ம் ஆண்டு சின்ன வீடு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். பாக்யராஜூவுடன் கல்பனா இணைந்து நடித்த இந்த படத்தில், கல்பனா குண்டாக இருப்பதால், அவரை திருமணம் செய்துகொண்ட பாக்யராஜூ அவரை எப்போதும் மட்டம் தட்டியே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் தான் நீங்கள் நினைப்பது போல் இல்லை என்றாலும், என்னாலும் உங்களுக்கு உதவிகராகமாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் கல்பனா ஒரு வசனம் பேச வேண்டும்.
இநத காட்சிக்கு என்ன வசனம் எழுதலாம் என்று யோசித்த பாக்யராஜூவுக்கு வசனமே கிடைக்கவில்லை. இதனால் 4 நாட்களாக அந்த காட்சியை தவிர்த்து வேறு காட்சியை படமாக்கியுள்ளார். நாட்கள் கடந்தாலும், அந்த காட்சிக்கான வசனம் மட்டும் பாக்யராஜூவுக்கு கிடைக்காத நிலையில், அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பார்த்திபன், நான் உங்களுக்கு தோலில் போடும் துண்டாக இல்லாவிட்டாலும், காலில் அணியும் செருப்பாக இருப்பேன் என்று பார்த்திபன் சொல்ல, இதை கேட்ட பாக்யராஜ், இந்த மாதிரி வசனத்தை தான் தேடிக்கிட்டு இருந்தேன் என்று சொல்ல அப்போதே அந்த காட்சியை படமாக்கியுள்ளார்.
இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரேடுத்த பாக்யராஜூவுக்கு ஒரு இடத்தில் சிக்கல் வரும்போது, வித்தியாசமான செயல்களையே வித்தியாசமாக செய்யும் இயக்குனர் என்று பெயரேடுத்த பார்த்திபன் ஒரு உதவி இயக்குனராக அவருக்கு வசனம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva