Category:
Created:
Updated:
குமார் சங்கக்கார 47 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்து, சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற உதவினார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை லீக்கில் முதலிடத்தைப் பிடித்தது, அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.
அதேவேளை, நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றது.
எனினும், இலங்கை அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றி ஈட்டியுள்ளது.