சினிமா செய்திகள்
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
Ads
 ·   ·  2269 news
  •  ·  1 friends
  • 1 followers

மன்னார் துப்பாக்கிச் சூடு - பின்னணியில் இரு கிராமங்களுக்கு இடையிலான முறுகலே காரணம் – பொலிசார்

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றையதினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே பின்னணியில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர்.  

இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய இருவர் நேற்று உயிரிழந்தனர்.  மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.

உந்துருளியில் பயணித்தவர்களில் ஒருவர் உந்துருளியில் இருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்தநிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரும், உயிரிழந்த இருவரும் 2022 ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  

2022 ஆம் ஆண்டு ஜுலை 8 திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் ஒரு தரப்பு கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் தற்போது வாள்வெட்டு சம்பவங்களும், துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களும் சுட்டிக்கட்டி வருவதுடன் அவை உடனடியாக கட்டப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியவுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

  • 324
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads