Ads
15 நாள்களுக்குள் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 374 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், 24 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads