முச்சக்கர வண்டிகளில் சட்டபூர்வ பாகங்கள் அகற்றுவதைத் தடுப்பதற்கும், மேலதின பாகங்களைஅகற்றுவதற்கும் இணக்கம்
முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கும், அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிகமாக உதிரிப்பாகங்களைப் பொருத்துவதற்கான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சட்ட கட்டமைப்பை அனைத்து தரப்பினரும் பாதுகாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினருக்கு மீண்டும் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
000