நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .
ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல் கைலியும் குல்லாவும் மட்டுமே அணிவார். அதற்கு ஒரு நெகிழ வைக்கும் காரணம் இருந்தது. அது பற்றி அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
'சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி நாடகக் குழு துவங்கி, பல்வேறு குழுக்களில் நடித்தேன். நாடகங்களில் நடிக்கும் போது வருவாய் குறைவாக இருந்ததால், சிரமமான சூழ்நிலையில் இருந்தேன்.
ஒருமுறை தீபாவளி அன்று பணம் இல்லாததால் புதுத் துணி எடுக்கவில்லை. அப்போது, அந்தப் பகுதியில் துணிக்கடை வைத்திருந்த, பிரமுகர் ஒருவர் ,நாடகக் குழுவில் இருந்த அனைவருக்கும் கைலி அன்பளிப்பாக அளித்தார்.
அன்று நாங்கள் அனைவரும் கைலி மற்றும் குல்லா அணிந்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். பிற்காலத்தில் என்னதான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் அந்த முஸ்லிம் பிரமுகரின் நினைவாக தீபாவளி அன்று கைலியும் குல்லாவும் மட்டுமே அணிந்து கொள்வேன்…" என்று தன் நன்றி மறவா பண்பை பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார், தங்கவேலு.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva