பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஹைதராபாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தநிலையில் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பெறப்பட்ட 2 ஆவது அதிகபட்ச ஓட்டமாக இது பதிவாகியுள்ளது. குறித்த வரிசையில் 314 ஓட்டங்களைக் குவித்து நேபாளம் அணி முதலிடத்தில் உள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சஞ்சு சம்சன் சதம் கடந்து 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 298 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 3 - 0 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
000