Category:
Created:
Updated:
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 83 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 11 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
000