ஆறு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா: வர்த்தமானி வெளியீடு
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுநர்களின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவிகளை இராஜினாமாக்களை அறிவித்தனர்.
அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமேல் மாகாண ஆளுனர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.