பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் பரீட்சை திணைக்களத்தில் 10 தொடக்கம் 15 வருடங்கள் பணிபுரிந்த அனுபவமிக்கவர்கள் எனவும், இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சிடம் கோரிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் தெரிழவிக்கப்படுகின்றது
எனவே இவர்களுக்கு பதிலாக வந்த புதிய அதிகாரிகள் சில விடயங்களை கற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகும் என்றும் அதுவரை பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் விஸ்தரிப்பதாலேயே இவ்வாறு நடந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் பரீட்சை திணைக்களத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமலிருக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அனுமதியின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பணியிடங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுின்றமை குறிப்பிடத்தக்கது
000