சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்
அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஒடேலா 2 (Odela 2) திரைப்படம், ரசிகர்களை கவரும் வகையில் தயாராக உள்ளது. அசோக் தேஜா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில்
மேடையில் உண்மையை போட்டுடைத்தார் நடிகர் சிவகுமார்
சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.2019 ல் நடந்தது.சிவகுமா
நடிகர் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை
ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வடிவேலு தனக்கு இன்னும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தரவேண்டுமென்றும், அவரது படத்தில் நடிக்க வடிவேலு சம்மதித்தால் நன்றாக
கமல்ஹாசன் செய்த உதவி - இயக்குநர் மகேந்திரன்
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது."கமல் செய்த உதவி சிறியதுதான். ஆனால் இயக்குநர் மகேந்திரன் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற
Good Bad Ugly - சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜ
ஒரு சொல் வெல்லும்,  ஒரு சொல் கொல்லும்
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன
ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்ட
நடிகர் ராமராஜனின் சாதனைகள்
ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது..அவரது சாதனைகளில் சில.......1. 43 படங்களில் தனி கதாநாயகனாகநடித்திருக்கிறார், எந்த படத்
சாதனை நாயகி கே.ஆர்.விஜயா
வறுமையான குடும்பத்தில் பிறந்து, வயிற்றுப்பாட்டிற்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.வ
ஓம் காளி ஜெய் காளி
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனு
இசைஞானி இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்
இசைஞானி இளையராஜா சமீபத்திய ஒரு நேர்காணலில் தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் பற்றிய ஒரு சுவாரசியத்தை கூறியுள்ளார். ராக்கம்மா கையத்தட
Ads
 ·   ·  2832 news
  •  ·  1 friends
  • 2 followers

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை முதலில் கூற வேண்டும்.

அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு டாநளுமன்ற தேர்தல் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம். அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.

இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.

நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான். அதை நாங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த போஸ்ட்டர் மூலம், நாட்டை நேசிக்கும் மக்களுக்கும், இந்த நாட்டை அழிக்க நினைக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவினையை நாம் தெளிவாகக் காண்கிறோம்.

சில எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல  ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 மார்ச்சில் IMF ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகளை ஏற்படுத்தியது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது. நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர்.

இன்று ஒரு நல்ல செய்தி வரவிருக்கும் நேரமும் இவ்வாறு செய்கின்றனர். அதை அழித்து வேறாக மாற்ற வேண்டும் என்று இன்று வேலை நிறுத்த அலை நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குள்ளாகியிருந்ததாக நான் நம்புகிறேன்.

எனவே, இதனை இந்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

 

  • 365
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads