Ads
இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்றையதினம் பலத்த காற்று வீசும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்
இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்றையதினம் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை அரபிக் கடலில் மணித்தியாலத்துக்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் மறுஅறிவித்தல் வரை அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads