சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்
மே 15 - 2018.எழுத்தாளர் பாலகுமாரன் இறந்து போனார்.அஞ்சலி செலுத்தி விட்டு வந்த ரஜினி அன்றைய தினம் ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார்.- பாட்ஷா 2- இனி இல்லவ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்
கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள்
 ‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பண
வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்ப
சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை
பெங்காலி மொழி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகையாக வளர்ந்தவர் ரிமி சென். இந்தியில் பிரபலமான தூம், தூம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்
அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.
1987.எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச்
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர் வ
புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்
ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன், விவேக், நாசர், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந
அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீட
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்
இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இ
சிவப்பு நிற உடையணிந்து  முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
Ads
 ·   ·  551 news
  •  ·  0 friends
  • 1 followers

நான்கு அம்சக் கொள்கைகளை முன்வைத்தேன் - அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது - விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நாட்டுக்கு முன்வைத்ததாகவும், தற்போது அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்மூலம் நமது வேலைத்திட்டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரியானவை என்பதை இது நிரூபிக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்

நாட்டு மக்களுக்கு நேற்றையதினம் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில் -

கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து முத்திரை குத்தப்பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்டுகளில் இந்த மாதிரியான முன்னேற்றத்தை எட்ட முடிந்ததே பாரிய வெற்றியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மைய வரலாற்றில், பொருளாதார படுகுழியில் விழுந்த உலகில் எந்தவொரு நாடும், இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்பான வெற்றியை பெற்றதில்லை என்றும் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்

மேலுன் பொருளாதாரப் படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்தால் 2048 ஆம் ஆண்டாகும்போது இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது விசேட உரையில் தெரிவித்தார்

தொடர்ந்து 6 காலாண்டுகளாக சுருங்கிச் சென்ற இந்நாட்டுப் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து வளரத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் வற்றிப் போயிருந்த எமது வெளிநாட்டுக் கையிருப்பு தற்போது 5,500 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்௲

இதேநேரம் ரூபாய் வலுப்பெற்றுள்ளது. வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளது. பணவீக்கம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளதென தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதன்மை கணக்கு இருப்பை உபரியாக மாற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டு நாட்டின் வெளிநாட்டுக் கணக்குக் கையிருப்பில் உபரியை ஏற்படுத்த முடிந்தது.

1977 இற்குப் பின்னர் உபரியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறையாகும் என்றும் தெரிவித்தார் . -

இதேநேரம் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர வேறு தீர்வு கிட்டாது என்று சொன்னவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியம் தேவையில்லை என்று கூறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மக்கள் கஷ்டப்படும்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பயனில்லை என்று கூறிய தரப்பினர், அவ்வாறனவர்கள் ஆட்சிக்கு வந்தால் பால் தேநீருக்கு பதிலாக வெறும் தேநீரை மட்டும் குடிக்க வேண்டிய நிலை வரும் என்பதை தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்ப நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சரியானவை என்பதை அறிந்துகொள்ளவே சிலருக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன என்று தெரிவித்த ஜனாதிபதி, இப்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்பதை புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு இன்னும் சில வருடங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.-

இதற்கு முன்னதாக 16 தடவை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெறப்பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு முறையும் இலங்கை தோல்வியடைந்தது. ஐஎம்எப் (IMF) வேலைத் திட்டத்தில் நாம் வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -

 ஐஎம்எப்(IMF) செல்ல அவசியமில்லாத, வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பவே நான் பாடுபடுகிறேன். அதற்காகவே நாம் உழைக்கிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பின் போது சுட்டிக்காட்டினார்.

சிலர் அதிகாரத்தைக் கோரி உலகெங்கும் சுற்றி வருகிறார்கள். பாடசாலைகளுக்குச் சென்றும் அதிகாரத்தை கேட்கிறார்கள். ஆனால் நாம் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கவும் அதற்காக சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்ளவும் முயன்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே பிரச்சினையைப் புரிந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கிய என்னுடன் நாட்டை முன்னேற்றுவீர்களா? அல்லது இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், இருட்டில் தடவிக் கொண்டு, அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் குழுக்களுடன் பயணிக்க விரும்புகிறீர்களா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். -

நாட்டு மக்களின் முடிவு ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. நாட்டின் எதிர்காலத்தையும் உங்கள் எதிர்காலத்தையும் மட்டுமன்றி அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகிறது என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார் -

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கை அன்னையை மீட்டுத் தருவதாக அன்று நான் வாக்குறுதி அளித்தேன். குழந்தையைப் பத்திரமாக மீட்டு வந்திருக்கிறேன். இப்போது, குழந்தையைக் காக்க எந்த ஆதரவும் தராத குழுக்கள் குழந்தையின் உரிமையைப் பெறப் போராடுகின்றனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 237
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads