சினிமா செய்திகள்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
Ads
 ·   ·  2401 news
  •  ·  1 friends
  • 1 followers

நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் - நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்

நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று காத்திருக்கின்றனர்.

நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் எனக் கூறினால் அந்த கட்சிகள் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஆரம்பிக்கின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (28) நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது,

“இந்த கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் மக்களின் பொறுமையை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அதே பொறுமை அந்த அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையும் போது ஓடியிருக்கமாட்டார்கள், வீழ்ச்சியடையும் போது அவர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஓடும் காலணிகளுக்கு, சவால்களை ஏற்று எப்படி ஓடுவது?”

நாட்டு மக்களை நேசித்து பொறுப்புகளை ஏற்காமல் தனது நியமனங்களையும் பதவிகளையும் பார்த்துக்கொண்டார். இந்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களில் இருந்து “கையாளாகாதவர்கள்” மற்றும் “தற்பெருமைக்கார்கள்” கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது நாடு வீழும் போது, மக்கள் உணர்வை வலுப்படுத்தாமல் மக்களை வீழ்த்த முயலும் தலைவர்கள் பலர் நம் நாட்டில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாமல் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியவில்லை. எரிபொருள் இல்லாமல் பஸ்ஸில் பயணிக்க முடியவில்லை. அப்போது பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இம்மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் இம்மாகாணங்களின் பிள்ளைகள் முப்பது வருடங்களாக பாடசாலைக் கல்வியை முறையாக கற்க முடியவில்லை. இப்போது இந்த தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிகளை மூடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், இந்த நாட்டின் பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்தால், நமக்கு எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.

அவ்வேளையில், எப்பொழுதும் எதிர்ப்புத் தெரிவித்தும், வேலைநிறுத்தம் செய்தும், நாட்டின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் நயவஞ்சகக் குழுவை, மட்டக்களப்புக்குக் அழைத்து வந்து தனிமைப்படுத்த வேண்டும், அங்கு தொழுநோயாளிகளைக் கொண்டுவந்து, சில காலங்களுக்கு முன் வைத்தனர்.

அவர்களை மீண்டும் சமுதாயத்திற்கு செல்ல அனுமதிக்காமல் ஒரே இடத்தில் பிரிக்க வேண்டும். இந்த முப்பது வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர், வடக்கில் உள்ள சிறைச்சாலைகளை தெற்கிலிருந்து தாக்குவதற்கு வடக்கின் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தவர் ஜே.வி.பியின் தலைவர் ரோஹன விஜேவீர. முதலில் பெற்றோல் குண்டுகளை தயாரித்து, சிறுவர் சிப்பாய்களை உருவாக்கியது, புலிகளுக்கு போரிட கற்றுக்கொடுத்தது, கருணா அம்மானுக்கு ஆயுதம் வழங்கியது ஜேவிபி தான். அன்றிலிருந்து இந்த நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தது ஜே.வி.பி.

இந்த நாட்டில் பல வருடகால யுத்தம் இந்த மாகாண மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் நாங்கள் பிளவுபட்டுள்ளோம். இல்லை அரசியல் தேவைக்கேற்ப நாம் பிளவுபட்டுள்ளோம். அரசியல் தேவைகளே அதற்கு வழிவகுத்தது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 473
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads