சாருஜன் ஷன்முகநாதன் அரைச்சதம் - இங்கிலாந்தை வீழ்த்தியது 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
செல்ம்ஸ்போர்டில்) நடந்த பகலிரவு ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்திருந்து.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை குவித்திருந்தது.
இலங்கை அணி 65 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதல் விக்கெட்டை இழந்த போதிலும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் வலுவான இலக்கை நிர்ணயித்தனர்.
இதில் அணியின் துணைத் தலைவர் சாருஜன் ஷன்முகநாதன் 75 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேலும் அணித் தலைவர் தினுர கலுபஹன 49 ஓட்டங்களை குவித்தனர்.
எனினும் ஆறாம், ஏழாம் துடுப்பாட்ட வீரர்களான மலித் பெரேரா மற்றும் டினிரு அபேவிக்ரம ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணி சார்பில் நோவா தைன் 58 ஓட்டங்களையும், அணித் தலைவர் லக் பென்கன்ஸ்டைன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் விஹாஸ் தேவ்மிகா மூன்று விக்கெட்டுகளையும், ஹிவின் கெனுல, திசர ஏகநாயக்க மற்றும் பிரவீன் மனீஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை முதலாம் திகதி பிரைட்டனில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
00