உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதற்கமைய 177 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் சார்பில் ஹென்ரிச் கிளாசன் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணி கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000