நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் நாட்டுக்குள் பொருளாதார நிலைமையை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையும் வங்குரோத்து நிலையில் இருந்திருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தச் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தற்போது முதல் படியை எடுத்துள்ளது. இதன்படி இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளது.
தற்போது பொருளாதார மாற்றச் சட்டத்தை நிறைவேற்றி அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். எனினும் ஆபிரிக்கா போன்ற நாடுகள் அந்தச் செயன்முறையைச் செய்வது கடினமாகும். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் முன்மொழிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000