Ads
பாகிஸ்தானில் வெப்ப அலை - 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக கடந்த 6 நாட்களில் மாத்திரம் 568 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads