ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல் தேவையாக இருப்பது முதல் நாள் முதல் காட்சியில் படத்தை பார்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே.
வலிமை படத்திற்கான முன்பதிவு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒரு முக்கிய தகவலாக தமிழில் மட்டும் இந்த வலிமை படத்தின் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் மாஸ் காட்டிய அஜித்குமார் இந்த வலிமை படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார்.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கொரோனாவுக்காக இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு பின்பு இறுதியாக பிப்ரவரி 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தான் தமிழில் மட்டும் வெளியாக இருந்த இந்த படத்தின் டப்பிங் வேலைகள் முடிக்கப்பட்டு 4 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல வலிமை படத்திற்கு நேரம் அப்படி அமைந்தது.
படத்தின் புரோமாசனுக்கு என போனி கபூர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அஜித் ரசிகர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட்டார். படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் இப்போது மட்டும் 1.84 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் 204 இடங்களில் வலிமை படம் இப்போதே ஹவுஸ் புல். 61 இடங்களில் மிக வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva