பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்
நீண்ட காலமாக டாக்டர் ஜாக்சன் ஒரு பெரிய, நவீன மருத்துவமனையில் நிரந்தர வேலை பெற விரும்பினார், கடைசியில் அவர் வெற்றி பெற்றார். அவர் விரும்பிய குறிப்பிட்ட பதவியில் நியமிக்கப்பட்டார், அவரும் அவரது மனைவியும் இப்போது அவர்கள் வசிக்கவிருந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். மறுநாள் சில அழகான பூக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன, அதில் 'ஆழ்ந்த அனுதாபம்' என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது. இயற்கையாகவே, டாக்டர் ஜாக்சன் அத்தகைய அசாதாரண குறிப்பைப் பெற்றதில் எரிச்சலடைந்தார், மேலும் அந்தக் குறிப்பின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டறிய பூக்களை அனுப்பிய கடைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
நடந்ததைக் கேள்விப்பட்ட கடையின் உரிமையாளர், தவறு செய்ததற்காக டாக்டர் ஜாக்சனிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆனால் எனக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், உங்களுக்குச் சென்றிருக்க வேண்டிய பூக்கள் ஒரு இறுதிச் சடங்கிற்கு அனுப்பப்பட்டன, அதில் "உங்கள் புதிய பதவிக்கு வாழ்த்துக்கள்" என்று எழுதப்பட்ட அட்டை இருந்தது.'
தாம்ஸன் என்னும் பெயருடைய குட்டிப் பையன் ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.
சிறிது நேர விளையாட்டுக்குப் பின்தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான். அங்கிருந்த மாடுகள் கவணையில் , ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன . அவை உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது .
” ஏன் , இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே , அதுங்க பாவம் இல்லையா ? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே . இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா ? அதுங்க கொஞ்சம் Freeயா சாப்பிடுமே ” என்றான்.
அவர் சிரித்தபடி ,” தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன் . கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே ” என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில் , ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார் .
வந்தவுடனேயே சிறுவன் கொல்லைக்குத்தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது . இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத்திணறியபடி தவித்துக் கொண்டிருந்தது.
தோட்டக்காரர் சொன்னார் ,
” கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும் . சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் ” சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல , பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது .
சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும் , கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தபபட்டவை .
வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ”அன்னக்காவடி தர்மம் தாயே!” என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.
‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.
இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.
ஏனைய சித்தர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு கோரக்கருக்கு உண்டு. சித்தர்கள் ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, பொதுவாக எல்லா சித்தர்களின் பாடல்களுமே மேலோட்டமான ஒரு பொருளும், உள்ளார்ந்த – எளிதில் விளங்காத ஒரு மறைபொருளும் கொண்டவை. இவற்றை தவறென எதிர்த்துக் குரல் எழுப்பியவர் கோரக்கர். அவ்வாறு பொருள் விளங்காத பல சித்தர் நூல்களையும் பொருள் புரியுமாறு தெளிவுறுத்தியவர் கோரக்கர். இவ்வாறு அவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு.
இந்நூல்கள் வெளிஉலகுக்குப் போகுமானால் தமக்கும் தமது நூல்களுக்கும் பெருமை குறையுமென்று கருதிய இடைக்காடர், அகப்பை, நந்திதேவர், மச்சமுனி, சட்டை நாதர், பிரம்மமுனி, அழுகண்ணர் ஆகிய ஏழு சித்தர்களும் கோரக்கரிடம் வந்து, அவர் இயற்றிய பதினாறு நூல்களையும் தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு வற்புறுத்தினர். மறுக்காமல் சரி என வாக்குக் கொடுத்த கோரக்கர், தன் ஆசிரமத்தில் உணவு அருந்தி விட்டுப் போகுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். கோரக்கர் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்ததில் அகமகிழ்ந்து ஏழு சித்தர்களும் உணவு உண்ண மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.
கோரக்கர் கஞ்சா இலைகளை அரிசிப் பருப்புடன் கலந்து அரைத்து அடைசுட்டு சித்தர்களுக்கு அன்புடன் பரிமாறினார். கஞ்சா இலை அடையை உண்ட அவர்கள் உடனேயே மயங்கிச் சாய்ந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோரக்கர், தான் இயற்றிய 16 நூல்களையும் சுருக்கித் தொகுத்து, ‘சந்திரரேகை’ என்று ஒரு நூலை உருவாக்கினார்.
சித்தர்கள் உறங்கி எழுந்து கோரக்கரிடம் அந்த பதினாறு நூல்களையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர். அந்நூல்களை தீயிட்டு அழித்தனர்! இந்த சுவாரஸ்யமான செய்தி, சந்திரரேகை நூலில் இடம் பெற்றுள்ளது.
வடக்குபொய்கைநல்லூர்
வடக்குபொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியில் கிட்டத்திட்ட 5 கி.மீ தொலைவில் வடக்கு பொய்கைநல்லூர் அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து பயணிப்பவர்கள் நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பயணிக்கும் வழியில் உள்ள பறவை என்னும் ஊரில் இருந்து திட்டத்திட்ட 3 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஊரை அடையலாம். வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர்) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது
நந்திநாதேஸ்வரர் திருக்கோயிலும் அதற்கு அருகேயுள்ள கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடமும் தான். சித்தர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து முக்தி பெற்றதால் இத்தலம் "சித்தாச்சிரம்" எனவும் போற்றப்படுகிறது.
பாலைவனம் என்றால் மணலாகக் கொட்டிக் கிடக்கும் இடம் மட்டும் அல்ல. செடி, கொடிகள் எதுவும் வளரமுடியாத பனிப்பிரதேசங்களும் பாலைவனம்தான். அப்படி ஒரு பாலைவனத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பாவும் மகனும் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் நடக்க நடக்க பனிப்பாறைகள் தான் இருந்தனவே தவிர வேறு எதுவுமில்லை. பிடித்து சாப்பிட மீன் இருக்கும் குளம், குட்டை என்று எதுவுமில்லை. எல்லாமே உறைந்திருந்தன. பசியால் உயிர் போய்விடுமோ என்ற பயம் மகனுக்கு ஏற்பட்டது. அப்பாவைப் பார்த்தான். ‘‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து விடாதே’’ என்றார் அப்பா.
மகனுக்கு நம்பிக்கையே இல்லை. மதியம் வரை ஒரு மீன்குட்டைக் கூட பார்க்க முடியவில்லை. முடிவில் ஒரு குளத்தைக் கண்டார்கள். அவர்களுக்குத் தேவையான மீன்களை ஓரளவுக்குப் பிடித்து கூடையில் போட்டுக் கொண்டார்கள். அதிலிருந்து தள்ளி ஒரு நிலப்பரப்பில் காய்ந்த மரம் ஒன்றைப் பார்த்தார்கள். அதன் அடியில் அமர்ந்தார்கள்.
‘‘அப்பா, மீனை எப்படி சாப்பிடுவது? பச்சையாகவா…’’
‘‘பச்சையாக எப்படி சாப்பிட முடியும்?’’
‘‘இங்கே விறகு இருக்கிறது. ஆனால் எரிக்க நெருப்பு வேண்டுமே?’’
‘‘ஏதாவது வழி இருக்கும். தளராதே’’..
‘‘என்னப்பா இது… எப்ப பாத்தாலும் ‘ஏதாவது வழி இருக்கும், தளர்ந்து விடாதே’ன்னு சொல்லிட்டே இருக்கீங்க..’’
‘‘அது ஒன்றுதான் வாழ்வதற்கான வாக்கியம்’’ என்று சொன்ன அப்பா, அருகில் இருந்த பனிக்கட்டியில் ஒன்றை எடுத்து தன்னிடம் இருந்த கத்தியால் அதை செதுக்கினார். அதை ஒரு குவி லென்ஸ் போல ஆக்கிவிட்டார். காய்ந்த சுள்ளிகளில் மிக மிக மெல்லிய சுள்ளிகளை கொஞ்சமாகக் குவித்துக் கொண்டார்.
பனிக்கட்டியால் செய்த குவி லென்ஸை வைத்து சூரிய ஒளியை மெல்லிய சுள்ளிகள் மேல் குவித்தார். சூரிய ஒளி அதன்வழியே சுள்ளியின் மேல் குவிந்தது. வெப்பம் ஏறத் தொடங்கியது. பொறுமையான காத்திருத்தலுக்குப் பிறகு சுள்ளி தீப்பிடிக்க ஆரம்பித்தது.
மகன் இதைப் பார்த்து துள்ளிக் குதித்தான். இன்னும் பெரிய விறகைப் போட்டு நெருப்பு மூட்டினான். அதில் மீனை அப்பாவும் மகனும் வேகவைத்து வயிறார சாப்பிட்டார்கள்.
அப்பாவின் அறிவுத்திறனை மகன் வியந்தான். எப்படிப்பட்ட சூழலிலும் பயப்படாமல் இருந்தால் மட்டுமே அதை சமாளிக்கும் அறிவும் வரும் என்பதைப் புரிந்து கொண்டான்.
இப்போது அப்பா விளையாட்டாகக் கேட்டார். ‘‘மகனே, எப்படி இந்த பனிப் பாலைவனத்தைக் கடக்கப் போகிறோம்?’’
‘‘கவலைப்படாதீர்கள் அப்பா. மனம் தளராதீர்கள். ஏதாவது வழி இருக்கும்’’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான் மகன்.
ஒரு நாள் ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி வந்தார்.அவர் வழக்கத்திற்கு மாறாக தோளில் ஒரு பை வைத்திருந்தார். அந்தப் பையில் சில உணவுப் பொருட்கள், மலர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் இருந்தன.அவரைக் கண்ட அந்த ஊரில் இருந்த மற்றொரு ஜென் குருவின் சீடர்கள் ஆச்சரியப்பட்டனர்.
பொதுவாக ஜென் துறவிகள் எதையும் சுமக்க மாட்டார்கள்.
ஆனால் இவன் தோளில் ஒரு பை ஏந்தி நடக்கிறான். ஏன் இப்படி?” என்று அவர்கள் குழப்பமடைந்தனர்.
அவர்கள் அதைத் தங்கள் குருவிடம் கூறினர்.
குரு சிரித்தார்.
“சரி, நான் அவரிடம் சென்று பேசுகிறேன்,” என்றார்.
அவர் அந்த அந்நிய துறவியிடம் சென்று கேட்டார்:
“ஜென் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா?” என்றார்.
அந்தத் துறவி உடனே தோளிலிருந்த பையை கீழே வைத்தார்.
குரு தலையசைத்தார்.
“சரி,” என்றார்.
பிறகு அவர் மீண்டும் கேட்டார்:
“ஜெனைப் புரிந்த பிறகு, அதை எப்படி வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?” என்றார்.
அந்தத் துறவி உடனே அந்தப் பையை மீண்டும் தோளில் சுமந்தார்.
இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறி பிரிந்தனர்.
சீடர்கள் குழப்பமடைந்தனர்.
“குருவே, இதிலென்ன அர்த்தம்?” என்று கேட்டனர்.
குரு அமைதியாகச் சொன்னார்:
“ஜென் என்பது எல்லாவற்றையும் துறப்பது மட்டும் அல்ல.அதை நம்முள் உணர்ந்த பிறகு, உலகை மீண்டும் ஒரு புதிய பார்வையுடன் அனுபவிப்பது.
அந்தத் துறவி பையை சுமந்தது அவருக்காக அல்ல.அவரின் பையில் இருந்தது பிறருக்காக.
அதனால் அவர் தான் உண்மையான துறவி என்றார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாட்டு பிரஜைகள், நைஜர் நாட்டிற்குப் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நைஜரில் நிலவும் அரசியல்மற்றும் தீவிரவாதம், கடத்தல் நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை, நைஜரில் உள்ள தனது தூதரகத்தின் ஆதரவைப் பெற முடியாது எனவும், அவசர சூழ்நிலைகளில் “அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்” எனவும் அறிவித்தது.
அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். அந்த நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கனடா மற்றும் பிரித்தானியா ஆகியவை தங்களது குடிமக்களுக்கு “அதிக அபாயம் உள்ள நாடு” என நைஜரை வகைப்படுத்தி, அவசர தேவையின்றி பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.
இந்த எச்சரிக்கைகள், நைஜரின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கின்றன. அதேவேளை நையர் செல்லும் பயணிகள், தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து, அரசாங்க அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கரீபியனில் கோர தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது.
சூறாவளி காரணமாகக் பெய்த கனமழையால், கியூபாவின் நீளமான நதியான ரியோ கௌடோ (Rio Cauto) தன் கரைகளை உடைத்துக் கொண்டு ஓடியது. இதனால், நாட்டின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசர கால ஊழியர்கள், படகுகள் மற்றும் ராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தண்ணீர் இடுப்பளவுக்கு மேல் இருந்த பகுதிகளில், மீட்புக் குழுவினர் நீச்சலுடைகளுடன் (Wetsuits) மக்களை மீட்டனர்.
கியூபாவின் கிரான்மா மாகாணத்தில், தீயணைப்புத் துறையும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து 385 பேரை மீட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூறாவளி கரையைக் கடக்கும் முன்பே, கியூபா அதிகாரிகள் கிழக்கு மாகாணங்களில் வசித்த 7,35,000க்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெற்றிகரமாக வெளியேற்றினர்.
வீடுகள், மின் இணைப்புகள், சாலைகள் மற்றும் பயிர்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெலிசா சூறாவளியால் கியூபாவில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என கியூபா அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஜமைக்கா மற்றும் ஹைதி ஆகிய நாடுகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ளம் வடிந்து, சாலைகள் சீரமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரும் காலத்தில் பூமியில் போர் நடப்பதைவிட வானத்தில் தான் போரே நடக்க போகிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏவுகணைகளுக்கும், டிரோன்களுக்கும் கோடிகளை கொட்டுகின்றன. எதிரிகளின் நாட்டுக்கே செல்லாமல், எதிரிகளின் இலக்குகளை தாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் ரஷ்யா தயாரித்து சோதனை செய்த புரவேஸ்ட்னிக்கை உலகின் உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அணு ஆயுதமான அது எப்படி செயல்படும்.
ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்காவை போல் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவை தவிர உலகின் எந்த நாட்டுடனும் அமெரிக்கா எளிதாக மோதும். அதேநேரம் ரஷ்யா உடன் மட்டும் நேரடியாக மோதுவது இல்லை.
உலகம் முழுக்க அண்மை காலம் வரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான் இருந்து வந்தன. தற்போது அதற்கு பதிலாக குரூஸ் ஏவுகணைகளை எல்லா நாடுகளும் பயன்படுத்த தொடங்கிவிட்டன. பாலிஸ்டிக் ஏவுகணை என்பது பூமியில் இருந்து விண்ணில் நேராக சென்று பின்னர் வளைந்து சென்று இலக்கை நோக்கி விழும் ஏவுகணையாகும். ஆனால் குரூஸ் ஏவுகணைகள், விமானம் போல் பறந்து சென்று இலக்கினை தாக்கும் இயல்பு உடையது.
இந்த குரூஸ் ஏவுகணைகள் எல்லாவற்றிற்கும் எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்ற ஒரு தூர இலக்குடன் செயல்படும். அமெரிக்காவின் டோமாஹாக், சீனாவின் சிஜே-10 ஆகியவை 2,500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கும். இந்தியாவின் நிர்பாய் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும். ஆனால் ரஷியாவின் புரவேஸ்ட்னிக், தூரம் என்பதே கிடையாது. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று இலக்கை தாக்கும் இயல்புடையது என்கிறார்கள்.
ஏவுகணைகளின் என்ஜின் திறனை வைத்து தூரம் முடிவு செய்யப்படும் நிலையில், புரவெஸ்ட்னிக், என்ஜின்களுக்கு பதிலாக சிறிய அணு உலையை பயன்படுத்துகிறதாம். அதனால் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். உலகின் எந்த பகுதியையும், இனி ரஷியாவால் தனது நாட்டில் இருந்தே குறிவைத்து அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த புரவேஸ்ட்னிக் அணுக்களால் செயல்படுகிறது. இது கொண்டு செல்லும் ஆயுதமும் என்பது வெறும் குண்டுகள் அல்ல.. அணு ஆயுத குண்டுகள் ஆகும். இதனால் எனவே புரவெஸ்ட்னிக் மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் வல்லமை உடையதாகும்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பேச்சுக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். பணி புரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான வியூகங்கள் கைகொடுக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். வேலை விஷயமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகள் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் ஒரு விதமான திருப்தி உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஆர்வம் இன்மை ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பயணம் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாடங்களில் இருந்த ஆர்வமின்மை மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வர்த்தக செய்வதில் சிந்தித்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலை துறையில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்களில் கவனம் வேண்டும். அதிகாரிகள் வழியில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
பணி நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான சூழல்கள் உருவாகும். குடும்பத்தினரிடம் புரிதலின்மை ஏற்படும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவு செய்வது பொருளாதார நெருக்கடியை தவிர்க்கும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு
விற்பனை சார்ந்த துறைகளில் அலைச்சல்களுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். சமூக ஆர்வலர்கள் மேடைப்பேச்சுகளில் பொறுமையை கையாளவும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகரம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றமான சூழல் அமையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பயனற்ற விவாதங்களில் தலையிடாமல் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கும்பம்
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். ஓய்வு நேரம் இன்றி பணியாற்ற வேண்டிய சூழல் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை விவேகத்தோடு செய்து முடிக்கவும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மீனம்
நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். பாக்கிகள் வசூல் செய்வதில் நயமான பேச்சுக்களை கையாளவும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் உண்டாகும். ஜாமின் செயல்களை தவிர்ப்பது நல்லது. வித்தியாசமான செயல்கள் மூலம் பலரின் கவனத்தை இருப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை 1.11.2025.
இன்று அதிகாலை 04.31 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று பிற்பகல் 02.47 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
இன்று அதிகாலை 01.31 வரை விருத்தி. பின்னர் இரவு 11.30 வரை துருவம். பிறகு வியாகாதம்.
இன்று அதிகாலை 04.31 வரை கரசை. பின்னர் மாலை 03.55 வரை வனிசை. பிறகு பத்தரை.
இன்று காலை 6.02 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2.47 வரை அமிர்த யோகம். பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சிவகங்கை அரண்மனையின் ஆலோசனை கூடத்தில், கால் மேல் கால் போட்டு, கம்பீரமாய், கர்வமும், ஆணவமும் நிரம்பி வழியும், முகத்துடன் அமர்ந்திருக்கின்றான் கவர்னர் லாட்டீ காட்.
சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார்.
நாற்காலியில் மேலும் பின்னோக்கி சாய்ந்து, இடது காலின் மேல், இருக்கும் வலது காலினை ஆட்டியபடியே, அதிகாரத் தோரணையில் பேசுகிறான் கவர்னர் லாட் டீ.
மிஸ்டர் முத்து வடுகநாதர், நீர் எமக்குக் கொடுக்க வேண்டிய வரியை, வெகு காலமாக கட்டவில்லை. ஏன்? விளக்கம் தேவை?
மன்னருக்கு ஆங்கிலம் தெரியாது,
கவர்னருக்கோ தமிழ் தெரியாது.
கவர்னருடன் வந்த மொழிபெயர்ப்பாளனோ, கைகட்டி, வாய் பொத்தி ஓரமாய், அமைதியாய் நிற்கிறான்.
மன்னரின் குழப்பத்தைக் கண்டும், தனது பேச்சினை புரிந்து கொள்ள முடியாத, இயலாமையைக் கண்டும், கவர்னரின் கண்களில் ஒரு எகத்தாளச் சிரிப்பு. ஆங்கிலம் தெரியாதா உனக்கு? என்னும் ஒரு கேலிப் பார்வை.
அறையின் வெளியில் இருந்து, இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வேலு நாச்சியார், அறைக்குள் புயலென புகுந்தார்.
எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான், எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஒரு நிமிடம்தான், ஒரே நிமிடம், வாரி சுருட்டிக் கொண்டு, தன்னையும் அறியாமல் எழுந்து நிற்கிறான் லாட் டீ.
யார் இவள்? என் மொழியில், ஆங்கிலத்தில், வீர முழக்கமிடுகிறாரே யார் இவள்? புரியவில்லை அவனுக்கு.
உனக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ, இப்பொழுது நான் பேசியதை, தெலுங்கில் சொல்கிறேன் கேள்.
கவர்னர் விழித்தான்.
இதோ, மலையாளத்தில் சொல்கிறேன் கேள்.
கவர்னரின் விழிகள் வியப்பால் விரிந்தன.
இதோ கன்னடத்தில் கூறுகிறேன் கேள்.
லாட் டீ தவிக்கத் தொடங்கினான்.
இதோ உருதுவில் கூறுகிறேன் கேள்.
அறையை விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் லாட் டீயின் மனதில் நுழைந்தது.
ஒரு பெண்மணிக்குள், இத்தனை மொழிகள் அடைக்கலமா?
கம்பீரமாக அமர்ந்திருந்த கவர்னர், இப்பொழுது கைகட்டி நிற்கின்றான்.
இது எங்கள் மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும், எங்களின் உழைப்பைச் சொல்லும.
எங்கள் மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு.
இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.
அன்புக்கு எங்கள் தலை என்றும் குனியும், ஆணவத்தோடு நெருங்கினால், தலை மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை.
உதவி என்று கேள், வாரி வாரி வழங்குகின்றேன். இனியொரு முறை, வரி என்று கேட்டால், வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது.
வேலு நாச்சியார் ஆங்கிலத்தல் முழங்கி முடித்த பின்பும், வெகுநேரம், கவர்னரின் காதுகளில், வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
இனியும் இங்கே நின்றால், உயிரும் மிஞ்சாது என்பதை அறிந்த கவர்னர், வேகமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிவென்ற வீரத் தமிழச்சி வேலு நாச்சியார்.
' சர்தார்' என்ற பட்டத்தை வல்லபாய் படேலுக்கு மகாத்மா காந்தி வழங்கினார். இது இந்தியில் தலைவர் என்று பொருள்.
பர்தோலி சத்தியாக்கிரகத்தின் போது அவரது விதிவிலக்கான நிறுவனத் திறமைகளுக்கான அங்கீகாரமாக இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டு குஜராத்தில் பர்தோலி சத்தியாக்கிரகம் நடைபெற்றது. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தது மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்பட்டது.
வல்லபாய் படேல் இறுதியில் இந்த சத்தியாக்கிரகத்தை வழிநடத்தினார். அதன் வெற்றி அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை வழங்கியது. சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக அவர் மாறியபோது இது அவரது அரசியல் அதிகாரத்தில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவின. முன்னதாக சில முறை இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
’டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று பரவிய வதந்திகளுக்கு படக்குழு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘டாக்சிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இன்னும் 140 நாட்களில் வெளியீடு என்று ‘டாக்சிக்’ தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் தெரிவித்துள்ளது.
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியிருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.
கனடிய பிரதமர் மார்க் கார்னி தென் கொரியாவில் நீர்மூழ்கிக் கப்பலக்ள தயாரிக்கும் உற்பத்திசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
கனடாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளும் போட்டியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம் தயாரித்த கப்பல்களைப் பார்வயைிடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தென்கொரியா விஜயம் செய்துள்ள பிரதமர் அங்கு பாதுகாப்பு கூட்டணி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கார்னியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்ஜின்டி, வைஸ் அட்மிரல் ஆங்கஸ் டாப்ஷி மற்றும் தென் கொரியா பிரதமர் கிம் மின்-சொக் ஆகியோரும் கலந்து கொண்டனர். கனடா, தனது பழமையான விக்டோரியா வகை (Victoria Class) நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றுவதற்காக 12 புதிய கப்பல்கள் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஆர்க்டிக் பகுதியில் இராணுவ பங்கேற்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
கனடா முழுவதும் மோசடி குறுந்தகவல்கள் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், தபால் திணைக்களம் அல்லது வருமான வரித்துறை (CRA) ஆகியவற்றின் பெயரில் வரும் மோசடி குறுந்தகவல்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானோர் அவை போலியானவை என்று அறிந்திருந்தாலும், பலர் இன்னும் இத்தகைய சதிகளுக்குள் சிக்கி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
போமன்வில்லில் (Bowmanville, Ontario) வசிக்கும் கேவின் போரிசிக் சமீபத்தில் ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸில் ஒரு மீன்பிடி கம்பி விற்க முயன்றபோது ஒரு மோசடிக்குள்ளானார்.
கொள்வனவாளர் என நம்பிய ஒருவர் அவருக்கு 150 டொலர் பணம் அனுப்பியதாகக் கூறி ஒரு e-Transfer இணைப்பை அனுப்பினார். போரிசிக் அந்த இணைப்பை கிளிக் செய்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 400 டொலர் மோசடியாக எடுக்கப்பட்டது. அவரிடமிருந்து பணம் வருமென நினைத்தேன், ஆனால் என் கணக்கிலிருந்தே பணம் போய்விட்டது, என அவர் கூறினார்.
கனேடியர்கள் அதிக அளவில் மோசடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என புதிய சைபர் பாதுகாப்பு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தற்போது, போலி செய்திகள் மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில், தன் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்ட இந்திய வம்சாவளியினர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, கனடாவின் எட்மண்டன் நகரில், இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (Arvi Singh Sagoo, வயது 55) என்பவர் தனது காதலியுடன் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
உணவகம் சென்றுவிட்டு தன் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சாகூ வந்தபோது, அங்கு ஒருவர் தனது கார் மீது சிறுநீர் கழிப்பதைக் கவனித்துள்ளார் அவர்.
என்ன செய்கிறாய் என சாகூ கேட்க, என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அந்த நபர் கூறியதுடன், சாகூவை தலையில் தாக்கியுள்ளார். சாகூ கீழே விழ, அவரது காதலி அவசர உதவியை அழைத்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் வரும்போது சாகூ சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக சாகூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றாலும், சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களுக்குப் பின் அவர் உயிரிழந்துவிட்டார்.
சாகூவைத் தாக்கிய Kyle Papin (40) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாகூ உயிரிழந்ததைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. Kyle Papin, நவம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரது தம்பி ஆண்ட்ருவின் (Andrew) இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.
அரண்மனை அது குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், 65 வயது ஆண்ட்ரு, காலஞ்சென்ற எலிசபெத் அரசியாரின் இரண்டாவது மகன். ஆண்ட்ரு இனி கிழக்கு இங்கிலாந்தில் தனிப்பட்ட வீட்டில் தங்குவார் என்று அறிக்கை குறிப்பிட்டது.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் (Jeffrey Epstein) அவருக்கு இருந்த தொடர்புகளால் ஆண்ட்ரு மீது நடவடிக்கை எடுக்க நெருக்குதல் வந்தது. குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரு மறுக்கும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.





















