·   ·  1170 posts
  •  ·  0 friends

பீமனுக்கு பாடம் சொல்லிய குபேரன்

மகா பாரத போர் நடந்து கொண்டிருந்தநேரமது….பாண்டவர்களிடம்செல்வங்கள் குறைந்து கொண்டே வந்தன.. ஒருபோர் என்றாலே பொருட் செலவுகள் அதிகம் ஆகுமே…. என்ன செய்வது என்று தர்மன்கையைபிசைந்துகொண்டிருந்த நேரம்பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கு வந்தார்…

என்ன தர்மரே….என்ன ஆலோசனை…என்று சிரித்து கொண்டே கூறவே, அதற்கு தர்மரோ,…..செல்வங்கள் குறைந்து விட்டது கிருஷ்ணா…..

…. இன்னும் போர் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியவில்லை நீதான்ஏதாவது யோசனை கூற வேண்டும்…. என்றார்…

தர்மரே….!…கவலை பட வேண்டாம்…. குபேரனிடம்….கடன் கேட்டு இருக்கிறேன்…. பீமசேனனைஅனுப்பி வாங்கி வர சொல் என்றார்…தருமனும் பீமனை அனுப்பி வாங்கி வர சொன்னார்…பீமனும்குபேரன் மாளிகையை தேடி புறப்பட்டான்…வாயில் காப்போனிடம் குபேரனை காண வேண்டும் என கூற…அவனும் வழிவிட, வீர நடை போட்டு கொண்டு மாளிகை உள்ளே நுழைந்து போய் அம்மாளிகையை நோட்டமிட்டான்பீமன்…..

அங்கே ஒருவரையும் காணோம்…ஒரு வயதான பெரியவர்அரிசியை கீழே கொட்டி கொண்டு யாரையும் கவனிக்காமல். .அரிசியில் உள்ள குருணிகளையும் கற்களையும் தீவிரமாய் ஆய்ந்துபொறுக்கி கொண்டிருந்தார்…. பீமசேனன்,அவரிடம் சென்று தான் குபேரன்ஐயாவை பார்க்க வேண்டும் என கூற…அந்த பெரியவர்அங்கிருக்கும் ஒரு நாற்காலியில் அவனை அமர சொல்லி விட்டுஉள்ளே சென்றார்.

அமர்ந்திருந்தபீமசேனனுக்கு…குபேரனிடம் செல்வம் பெறும் நம்பிக்கை போய்விட்டது.. குபேரன் மாளிகைஎன்றால் தங்கத்தாலும்வைரங்களாலும்…..இழைத்திருக்க வேண்டும்… இங்கே என்னடா ..என்றால் அரிசியைபொறுக்கி கொண்டு இருக்கிறார்கள்…. ஒரு பணியாளும் இல்லை…ஒன்றும்இல்லை…. இங்கிருந்து செல்வங்களை வாங்கி செல்வது கடினம்தான் என நினைத்து, கொண்டு நெடுநேரம் அமர்ந்திருந்தான்…. நேரம் செல்ல செல்ல பசிவேறு வயிற்றை கிள்ளியது….

ஒருவேளையாக,.பட்டுபீத்தாம்பரம் உடுத்தி கொண்டு, ஜவ்வாது மணம் வீச…… முக வதனம் தேஜேஸ்சுடன்அரிசியை பொறுக்கி கொண்டிருந்த அதே பெரியவர்பீமன்இருக்குமிடம்…. வந்து அவனருகில்அமர்ந்தார்…. பீமன் அப்போது தான் அவரை உற்று நோக்கினான்…. அரண்டுபோனான். அவர் குபேரர் தான்…. பீமன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர் அவனை விருந்து ண்ணும் அறைக்கு அழைத்து சென்றார்

அந்த அறை வைரங்களாலும்.. வைடூரியங்காளாலும்………அலங்கரிக்கபட்டு பீமனின்கண்களைபறித்தது……...அவன் பசியை கண்ணுற்ற குபேரன்,பணி பெண்களை அழைத்து விருந்தை எடுத்து வரும்படி கட்டளை இட்டார்…

கிட்டத்தட்ட இருபது பணிப்பெண்கள் அணி வகுத்துதங்கதாம்பூலத்தில் வாழைஇலையால்மூடி பீமன் முன் விருந்தை வைத்தனர்…. குபேரன் பீமனிடம்முதலில் விருந்தை சாப்பிட சொன்னார் …. நல்ல பசியில் இருந்தஅவன் அவசர அவசரமாக மூடியிருந்த வாழை இலையை எடுத்து தூர போட்டு விட்டு உணவைஆசை ஆசையாக தேடி பார்க்க, அங்கு தட்டுகளில் இருந்ததோ….பவளம்…. மாணிக்கம்…. வைரம்….. வைடூரியங்கள்…ரத்தினங்கள் தங்கபாளங்கள்மட்டுமே ….. சாப்பிட ஒன்றும் இல்லை..

பீமன் தன்வயிற்றை பிசைந்து கொண்டான்…நல்ல பசி அவனுக்கு…அவன் கண்கள் உணவை தேடியதை புரிந்து கொண்ட குபேரன்…. அவனை பார்த்து…. பீமா…முதலில் நமது செல்வம் நவ தானியங்கள் தான்…. அவற்றைஏளனம் செய்யாதே…. பின்பு தான்எல்லா செல்வங்கள்… .நவரத்தினங்ளைசாப்பிட முடியுமா…. ஆயிரம் செல்வங்கள், இருந்தாலும் அவைகள் பசி தீர்க்க பயன் படாது.. புரிந்து கொள்…. என கூறிய குபேரன்….மீண்டும் பணி பெண்களை உணவு பரிமாற கூற சொன்னார்….பீமன் தான் முன்பு எண்ணிய எண்ணங்களை எண்ணி குபேரனிடம் மனம் வருந்தினான்…..

அறு சுவை உணவுஉண்ட பின் பீமசேனனுக்குஅந்த செல்வங்களை மூட்டைகட்டி தூக்க முடியாத அளவிற்குஅளவில்லாத செல்வங்களை கொடுத்து அனுப்பினார் குபேரன்.

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.